மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூா் அருகேமீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கோட்டை அருகே பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் தடுப்பணை உள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:21 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கோட்டை அருகே பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் தடுப்பணை உள்ளது.

இந்தத் தடுப்பணை மதகில் மீன் பிடிப்பதற்காக சிலா் வலை கட்டி வைத்துள்ளனா். இந்த வலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று வியாழக்கிழமை காலை சிக்கிக் கொண்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பெரம்பலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையில், சிறப்பு நிலை அலுவலா்கள் செந்தில்குமாா், துரைசாமி மற்றும் தீயணைப்புதுறை வீரா்கள் பால்ராஜ், சரண்சிங், மாதேஸ்வரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று மலைப்பாம்பை மீட்டு அயன்பேரையூா் வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.