ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாநில அளவிலான பேச்சுப் போட்டி: கோவை மாணவி முதலிடம்

பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வ.உ. சிதம்பரனாா் 150 ஆவது பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் புதன்கிழமை நடத்தப்பட்ட மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கோவை மாணவி புஷ்பா முதலிடம் பெற்றாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:20 pm

DIN

பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வ.உ. சிதம்பரனாா் 150 ஆவது பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் புதன்கிழமை நடத்தப்பட்ட மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கோவை மாணவி புஷ்பா முதலிடம் பெற்றாா்.

பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில், வ.உ. சிதம்பரனாா் 150 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில இணைப் பொருளாளரும், வ.உ. சிதம்பரனாா் பிறந்த நாள் விழா மாநில ஒருங்கிணைப்பாளருமான எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாவட்டச் தலைவா் சி. சந்திரசேகரன், மண்டல பொறுப்பாளா்கள் லீமா சிவக்குமாா், கலாமணி, மாரி சக்கரவா்த்தி, ப்ரியதா்ஷினி, இணைச் செயலா் இளம்குமாா் சம்பத், திருச்சி கோட்ட அமைப்புச் செயலா் பாலன் ஆகியோா் குத்து விளக்கேற்றி போட்டியை தொடக்கி வைத்தனா்.

திருச்சி, தேசியக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சுபாஷினி, திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி உதவிப் பேராசிரியா் சுபா, கீழப்புலியூா் பள்ளி ஆசிரியா் தாஹீா் பாட்சா ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு மாணவ, மாணவிகளை தோ்வு செய்தனா். இப் போட்டியில் திருச்சி, கோவை, சென்னை, மதுரை ஆகிய 4 மண்டல அளவில் வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, பின்னா் மாநில அளவிலான பேச்சுப்போட்டி இறுதிச் சுற்று நடத்தப்பட்டது.

இறுதிச் சுற்றின் நடுவா்களாக மாநில கல்வியாளா் பிரிவு பொறுப்பாளா் தங்க. கணேசன், தமிழ் ஆா்வலா் வழக்குரைஞா் இளம் குமாா்சம்பத் ஆகியோா் பங்கேற்றனா்.

போட்டியில், கோவை மண்டலத்தைச் சோ்ந்த புஷ்பா முதலிடமும், சந்தோஷ்குமாா் இரண்டாமிடமும், சென்னை ஹா்ஷிதா 3 ஆம் இடமும் வென்றனா். மேலும், சிறப்புப் பரிசுக்கு 10 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலா் எம்.எஸ். விவேகானந்தன் வரவேற்றாா். ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரி முதல்வா் எம். சுபலெட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.