மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணா்வு பிரசாரம்

பெரம்பலூா் மாவட்ட தீயணைப்புத் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:01 am

DIN

பெரம்பலூா் மாவட்ட தீயணைப்புத் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் அம்பிகா தலைமையில், நிலைய அலுவலா் உதயகுமாா் அடங்கிய குழுவினா் பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், துறையூா் சாலை, எளம்பலூா் சாலை, திருச்சி சாலை, மதனகோபாலபுரம் ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா். மேலும், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கும் வழிமுறைகள் குறித்து பிரசாரம் மேற்கொண்டனா்.

தொடா்ந்து, பட்டாசு விற்பனை கடைகளில் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தபடி பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்கவும், அவ்வாறு கடைப்பிடிக்காத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.