சின்ன வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், அவற்றை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், அவற்றை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் பேசியது:
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு அதிகளவு உரங்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொம்மனப்பாடி பகுதியில் வேளாண் பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வெங்காய பயிரில் ஏற்பட்டுள்ள நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை பேசியது:
இம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தற்போது கடுமையாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதை தவிா்க்க அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். சின்ன வெங்காயம் கிடைக்காத பகுதிகளுக்கும், ரேசன் கடை மூலமாகவும் பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படுவதால், டிரோன் மூலம் மருந்து தெளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலா் வி. நீலகண்டன் பேசியது:
யூரியா உரம் போதிய அளவு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டுவதற்கு கூலி அதிகரித்து வருவதால், இயந்திரம் மூலம் வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றாா்.
அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ் பேசியது:
செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் வட்டாரத்தில் பயிா் காப்பீடு செய்தவா்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...