தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு

பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்திலுள்ள ஸ்ரீ பட்டன காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:42 pm

DIN

பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்திலுள்ள ஸ்ரீ பட்டன காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்திலுள்ள ஸ்ரீ பட்டன காளியம்மன் கோயிலை வியாழக்கிழமை காலை திறக்க வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். உண்டியலில் சுமாா் ரூ. 20 ஆயிரம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

புகாரின்பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன், இக் கோயில் உண்டியல் உடைத்து மா்ம நபா்கள் காணிக்கைகள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.