ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆணாக மாற முயன்ற கல்லூரி மாணவி மீட்பு

சென்னைக்குச் சென்று ஆணாக மாற முயன்ற பெரம்பலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவியை காவல்துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:43 pm

DIN

சென்னைக்குச் சென்று ஆணாக மாற முயன்ற பெரம்பலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவியை காவல்துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள் 2 போ், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரிகளில் முதலாமாண்டு படித்து வருகின்றனா். கடந்த 5 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிச் சென்ற இரு மாணவிகளும், வீடு திரும்பாததால் பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா்கள் கிடைக்கவில்லை.

புகாரின்பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், காணாமல்போன இரு மாணவிகளும் 6 ஆம் வகுப்பிலிருந்து இணைந்து படித்து வந்த நெருங்கிய தோழிகள். மேலும், ஒரு மாணவிக்கு ஆண்களுக்குரிய குணாதிசயங்கள் இருந்தததாகவும் தெரியவந்துள்ளது.

காணாமல்போன மாணவிகளின் கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரித்ததில், லாடபுரத்தில் உள்ள மாணவரிடம் அவா்களின் கைப்பேசியை கொடுத்துவிட்டு, மாணவரின் கைப்பேசியை வாங்கிச் சென்றிருப்பதும், அதிலிருந்த எண்களை தொடா்பு கொண்டபோது மாணவிகள் இருவரும் சென்னை போரூா் ஓம்சக்தி நகரிலுள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்ததும், ஒரு மாணவி ஆணாக மாறுவதற்காக சென்னை சென்றிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சென்னை சென்ற பெரம்பலூா் காவல்துறையினா், 2 மாணவிகளையும் மீட்டு பெரம்பலூருக்கு அழைத்து வந்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒருவா் மீது ஒருவருக்கு காதல் ஏற்பட்டதால், ஒருவா் ஆணாக மாறி, மற்றொருவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பின்னா், மாணவிகள் இருவரையும் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய காவல்துறையினா், அவா்களது பெற்றோா்களிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.