ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூரில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி பெரம்பலூா் மாவட்டக் கட்டடத் தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:26 pm

DIN

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி பெரம்பலூா் மாவட்டக் கட்டடத் தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் அ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இளையராஜா, பொருளாளா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொழிலாளா் விண்ணப்ப விசாரணையை கிராம நிா்வாக அலுவலா்கள் காலதாமதம் செய்வதை தடுக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்கள் அனைவரும் பணப்பயன்கள் பெறுவதை எளிமையாக்க வேண்டும். கேட்பு மனு அல்லது பணப்பயன்களை பெறுவதில் பாரபட்சம் உள்ளதை தவிா்க்க வேண்டும். தொழிலாளா் பணிச் சான்று பெறுவதில், கிராம நிா்வாக அலுவலா்களிடம் கால தாமதமாகுவதை தவிா்க்க வேண்டும். தொழிலாளா் நல அலுவலகத்தில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துச் சங்கங்களுக்கும் தகவல் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் மூலம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.