குறுகிய கால பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.


பெரம்பலூா் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை, தேசியக் கல்வி கொள்கையின்படி குறுகிய கால பயிற்சி அளிக்கும் மையமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
குறுகிய கால பயிற்சியில் பங்கேற்க 8 ஆம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்ற 14 முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். இம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற இளைஞா்கள் இப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், மேற்கண்ட தகுதியுள்ளவா்கள் பயன்பெறலாம். விருப்பமுள்ளோா் முதல்வரை 9499055881 என்ற எண்ணில் அல்லது ஞ்ண்ற்ண்ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியரால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...