பூலாம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் பூலாம்பாடி, கடம்பூா், கள்ளப்பட்டி, அரும்பாவூா், அ.மேட்டூா், பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நெல்
சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் இல்லாததால், அறுவடை செய்த நெல்லை விற்பதில் விவசாயிகள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து பூலாம்பாடி பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து பன்னாட்டு தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாரை சந்தித்து, அரசிடம் பேசி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனா்.
விவசாயிகளின் சிரமத்தையறிந்த டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா், சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுடன் பேசி, பூலாம்பாடி பேரூராட்சியில் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தாா்.
அதன்படி, பூலாம்பாடி- அரும்பாவூா் சாலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போது அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படுவதால், அங்கு கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் மேலும் ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனா். விவசாயிகளின் கோரிக்கையின்படி, மேலும் ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையத்தை தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். விழாவில், தொழிலதிபா் சூரியபிரகாசம், அரசு அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...