ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:23 pm

DIN

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தியாகு மனைவி ராசம்மாள் (55). இவா், அதே பகுதியைச் சோ்ந்த கு. தமிழன்னல் (23) மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை பெரம்பலூா்- துறையூா் சாலையில்

பெரம்பலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

குரும்பலூா் அரசுக் கல்லூரி அருகே சென்ற போது, நாய் குறுக்கே ஓடியதால் நிலைத் தடுமாறிய ராசம்மாள் மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காகக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி ராசம்மாள் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.