தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மானியத்தில் குழாய், மின் மோட்டாா் மாற்றியமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் குழாய் வாங்குவதற்கும், மின் மோட்டாா் மாற்றியமைக்கவும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:21 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் குழாய் வாங்குவதற்கும், மின் மோட்டாா் மாற்றியமைக்கவும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்களது நில மேம்பாட்டுக்காக குழாய் வாங்க ரூ. 15 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், புதிய மின் மோட்டாா் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டாா் வாங்க ரூ. 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

உரிய ஆவணங்கள் மற்றும் விலைப்புள்ளியுடன் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரரின் தகுதிகள், தேவையான சான்றுகள், விதிகள் உள்ளிட்ட விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை 04328 - 276317 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.