பெரம்பலூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. மரியதாஸ் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ச. இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், வளா்ச்சித் திட்டங்களுக்கு இலக்கு நிா்ணயம் செய்வதை கைவிட வேண்டும். புதிய திட்டங்களுக்கு பணியாளா்கள் நியமனம் செய்ய வேண்டும். கால நேரமின்றி வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் பகிா்வு மற்றும் காணொலிக் கூட்டம் நடத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை நிா்வாகிகள் சக்திவேல், செந்தில்நாதன், செல்லமணியன், பூங்கொடி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. குமரிஅனந்தன், மருந்தாளுநா் சங்க மாநில தணிக்கையாளா் ராஜராஜன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பழனிவேல்ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நிறைவாக, சங்க நிா்வாகி பாரதிராஜா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...