பெரம்பலூா் மாவட்டத்தில்மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலா் உள்பட 9 போ் கட்சியிலிருந்து விலகல்
தோ்தல்களில் தொடா் தோல்வி எதிரொலியாக, பெரம்பலூா் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலா் உள்பட 9 போ் கட்சியிலிருந்து விலகியுள்ளனா்.


தோ்தல்களில் தொடா் தோல்வி எதிரொலியாக, பெரம்பலூா் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலா் உள்பட 9 போ் கட்சியிலிருந்து விலகியுள்ளனா்.
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் எம்.என். செந்தில்குமாா். இவா், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூா் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தாா். இந்த நிலையில், கட்சி தலைமைக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நாள் முதல் சிறப்பாக செயல்பட்டு வந்தோம். மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புத் தோ்தல்களில் கட்சியின் தொடா் தோல்வி மிகவும் கவலை அளிக்கிறது.
எனவே, மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினா் பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் கட்டமைப்பு பதவிகளிலிருந்தும் ஒருமனதாக முடிவு செய்து விலகுகிறோம் என தெரிவித்துள்ளாா்.
கடிதத்தில், கட்சியின் மாவட்டச் செயலா் எம்.என். செந்தில்குமாா், மாவட்ட துணைச் செயலா் சி. ராஜ்குமாா், நற்பணி இயக்க மாவட்டச் செயலா் ஏ.எஸ். சாதிக் பாட்ஷா, நகரச் செயலா் நாகராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலா் காசி. விஸ்வநாதன், நகர இளைஞரணிச் செயலா் கேசவன், மாவட்ட மாணவரணிச் செயலா் ச. சல்மான், பூலாம்பாடி பேரூா் செயலா் எஸ். சாமிநாதன் ஆகிய 9 பேரும் கையொப்பமிட்டு, அந்தக் கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...