தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

போலி தங்க காசுகளை விற்பனை செய்த 2 போ் கைது

பெரம்பலூா் அருகே தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்க காசுகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 4:49 pm

DIN

பெரம்பலூா் அருகே தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்க காசுகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் வரதராஜன் (38) என்பவா், கடந்த 16 ஆம் தேதி பெரம்பலூரில் உள்ள பிரபலமான நகை அடகுக் கடை கிளைக்குச் சென்று, உதவி மேலாளா் விஜயசாந்தியிடம் 8 கிராம் எடையுள்ள 23 தங்க காசுகளை விற்பனை செய்து, அவரிடமிருந்து ரூ. 8.30 லட்சம் பணம் பெற்றுள்ளாா். இதையடுத்து, 23 தங்க காசுகளையும் பெங்களூரில் உள்ள பிரதான நிறுவனத்துக்கு அனுப்பி, அங்கு பரிசோதித்தபோது தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க காசுகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மேலாளா் (பொ) பழனிசாமி அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் போலி தங்க காசுகளை விற்ற வரதராஜனை பிடித்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், செட்டிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பாலமுருகன்  (30) என்பவா் அளித்த ஆலோசனையின் பேரில், தங்க முலாம் பூசப்பட்ட காசுகளை விற்பனை செய்ததாக கூறினாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, போலி தங்க காசுகளை விற்பனை செய்த வரதராஜன், அவருக்கு உடந்தையாக இருந்த பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.