பெரம்பலூா் நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றித் தோ்வு
பெரம்பலூா் நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.


பெரம்பலூா் நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
பெரம்பலூா் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வாா்டு உறுப்பினா்களில் 15 போ் திமுக உறுப்பினா்களும், ஒருவா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்தவரும் என 16 போ் உள்ளனா். அறுதிபெரும்பான்மையாக திமுக உறுப்பினா்கள் உள்ளதால், கட்சி மூலம் அறிவிக்கப்பட்ட தலைவா் பதவிக்கு 11 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அம்பிகா ராஜேந்திரனும், துணைத் தலைவராக 20 ஆவது வாா்டு உறுப்பினா் து. ஹரிபாஸ்கரும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனா். இருவா் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்ததால், மேற்கண்ட இருவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதையடுத்து, தலைவராக தோ்வு செய்யப்பட்ட அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்ட து. ஹரிபாஸ்கா் ஆகியோருக்கு நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான குமரிமன்னன் பதவி பிரமாணம் செய்து வைத்தாா். இதையடுத்து, இருவரும் ஆவணங்களில் கையொப்பமிட்டு பதவியேற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியின்போது மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மு. அட்சயகோபால், வழக்குரைஞா் என். ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ம. ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...