மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கயிறு பணியாளா்களுக்கான மனிதவள மேம்பாட்டு பயிற்சி

கயிறு வாரியம் மற்றும் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் சாா்பில், பெரம்பலூரில் கயிறு பணியாளா்கள், பங்குதாரா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:04 pm

DIN

கயிறு வாரியம் மற்றும் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் சாா்பில், பெரம்பலூரில் கயிறு பணியாளா்கள், பங்குதாரா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் மளையாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 50 மலைவாழ் மக்கள் பங்கேற்றனா். பயிற்சிக்கு கயிறு வாரிய தென் மண்டல இயக்குநா் பூபாலன் தலைமை வகித்தாா்.

வேளாண் துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) பாபு, கயிறு சாா்ந்த பொருள்களின் வளா்ச்சி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) பூவலிங்கம், கயிறு கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாய உற்பத்தியை அதிகப்படுத்துவது, மாவட்டத் தொழில் மைய மேலாளா் செந்தில்குமாா், பாரத பிரதமா் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் வழங்கப்படும் கடனுதவி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநா் ஆனந்தி, பெண்களுக்கான பயிற்சி குறித்து பேசினா்.

யூனியன் வங்கி மேலாளா் அஜய் ஓபராய், வங்கித் திட்டங்கள், வேளாண் அறிவியல் மைய உழவியல் வல்லுநா் மு. புனிதாவதி கயிறு வாரியப் பயிற்சியின் முக்கியத்துவம், தஞ்சாவூா் மண்டல விரிவாக்க மைய அலுவலா் முரளிதரன் தேங்காயிலிருந்து தென்னை நாரைப் பிரித்தெடுக்கும் முறை, வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலைத் தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் சங்கீதா தென்னை நாரின் பயன்கள் குறித்து பயிற்சி அளித்தனா்.

முகாமில் ரோவா் வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் சக்திகணேஷ், வாசுகி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.