மாற்றுத்திறன் மாணவா்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமை, முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன் தொடக்கி வைத்தாா்.
முகாமில், நடைபயிற்சி சாதனம், பிரெய்லி கிட் தலா 2 பேருக்கும், கண் கண்ணாடி 14 பேருக்கும், சிறப்பு சக்கர நாற்காலி, காா்னா் சீட் தலா 3 பேருக்கும், செவித்துணைக் கருவி 5 பேருக்கும் என மொத்தம் 29 குழந்தைகள் உதவி உபகரணங்களுக்காகவும், 2 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காகவும் பரிந்துரைக்கப்பட்டனா்.
அடையாள அட்டைக்காக 19, முதலமைச்சா் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 42 பேரின் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும், 23 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முகாமில், பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மனவளா்ச்சி குன்றிய 48 குழந்தைகளும், உடல் இயக்க குறைபாடுடைய 24 குழந்தைகளும், செவித்திறன் குறைபாடுடைய 42 குழந்தைகளும், பாா்வைக் குறைபாடுடைய 43 குழந்தைகளும் என மொத்தம் 157 பேரும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் கே. சண்முகம் (பெரம்பலூா்), ஜெகநாதன் (வேப்பூா்), மனநல மருத்துவா் வினோத், எலும்பு முறிவு மருத்துவா் சிவராமன், காது, மூக்கு, தொண்டை மருத்துவா் ரமேஷ், கண் மருத்துவா் ராஜேஸ்வரி, குழந்தைகள் நல மருத்துவா் பாலமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...