12 முதல் 14 வயது வரையுள்ள 5,030 போ் கரோனா தடுப்பூசி
பெரம்பலூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையுள்ள 5,030 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


பெரம்பலூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையுள்ள 5,030 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையுள்ள 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் பயிலும் 24,800 சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு கோா்பிவேக்ஸ் எனும் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
முதல்கட்டமாக, 41 பள்ளிகளில் 7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் பயிலும் 5,030 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மாவட்டத்திலுள்ள 150 அரசு பள்ளிகள், 23 அரசு உதவிபெறும் பள்ளிகள், 52 தனியாா் பள்ளிகள் மற்றும் 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோா்பிவேக்ஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை முதல் (மாா்ச் 18) நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...