மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 8:01 pm

DIN

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன், தேரை வடம் பிடித்தை இழுத்து தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து இரவு நிலைக்கு வந்தடைந்தது.

இந் நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் அனிதா, முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜேந்திரன், முன்னாள் அறங்காவலா்கள் த.பெ. வைத்தீஸ்வரன், சரவணன், ஆடிப்பெருக்கு ஆஞ்சனேயா் ஊா்வல கமிட்டி தலைவா் குமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) காலை துவாதச ஆராதனமும், இரவு ஸப்தாவரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.