சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.


பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ஆவினங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (88). இவா், தனது பேத்தி ரோகினியுடன் (17), முசிறியிலிருந்து திட்டக்குடிக்கு வியாழக்கிழமை அதிகாலை காரில் சென்றுக்கொண்டிருந்தாா். காரை, புவனேஸ்வரன் (21) ஓட்டினாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகே காா் வந்துகொண்டிருந்தபோது, அதே வழித்தடத்தில் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ரோகினியும், காா் ஓட்டுநா் புவனேஸ்வரனும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...