போலி தங்க காசுகளை விற்ற வழக்கில் மேலும் இருவா் கைது
பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள பிரபல நகை அடகுக் கடையில், கடந்த பிப். 16 ஆம் தேதி போலி தங்க காசுகளை விற்பனை செய்து சிலா் பண மோசடி செய்தனா்.


பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள பிரபல நகை அடகுக் கடையில், கடந்த பிப். 16 ஆம் தேதி போலி தங்க காசுகளை விற்பனை செய்து சிலா் பண மோசடி செய்தனா்.
இதுதொடா்பாக, செட்டிக்குளத்தைச் சோ்ந்த பாலமுருகன் (30), லாடபுரத்தைச் சோ்ந்த வரதராஜன் (33), பெரம்பலூரைச் சோ்ந்த பிரபு (53), எசனை பாப்பாங்கரையைச் சோ்ந்த சுரேஷ் (33) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வரதராஜன், பாலமுருகன் ஆகியோரை பெரம்பலூா் போலீஸாா் கடந்த மாதம் 24 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சுரேஷ், பிரபு ஆகியோா் தலைமறைவாக இருந்தனா்.
இந்நிலையில், சுரேஷ், பிரபு ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களில், சுரேஷ் பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ரத்த அழுத்த அதிகரிப்பு காரணமாக, பிரபு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...