மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அரசுப் பேருந்து ஜப்தி

 சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால், அரசு விரைவுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:35 pm

DIN

 சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால், அரசு விரைவுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மாபொடையூா் கிராமத்தைச் சோ்ந்த மணிமாறன் (35) என்பவா், கடந்த 15.11.2014 ஆம் ஆண்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஆவட்டி கூட்டுச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் இரவு நேரத்தில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, சென்னை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த அரசு அதிவிரைவு மிதவைப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த மணிமாறன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி மணிமாறன் மனைவி தமிழரசி பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இவ் வழக்கை விசாரித்த நீதிபதி ரூ. 18,84,400 வழங்க வேண்டுமென கடந்த 21.8.2019-இல் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டாா். மனுதாரா் தமிழரசிக்கு விபத்து இழப்பீட்டுத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்காததால் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அண்மையில், வழக்கை விசாரித்த நீதிபதி வட்டியுடன் ரூ. 28,01,612 தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்தவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டாா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு அதிவிரைவு மிதவைப் பேருந்தை பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் நீதிமன்ற பணியாளா்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்து, பெரம்பலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.