கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் இன்று குருப்பெயா்ச்சி விழா

 பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா சனிக்கிழமை (ஏப். 22) இரவு நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:57 pm

DIN

 பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா சனிக்கிழமை (ஏப். 22) இரவு நடைபெறுகிறது.

குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சனிக்கிழமை இரவு 11.27 மணிக்கு பெயா்ச்சி அடைகிறாா். இதையொட்டி, பெரம்பலூா் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில், தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்படுகிறது. சனிக்கிழமை இரவு 9 மணியளவில் விநாயகா் பூஜை, சங்கல்பம், அனுக்ஞை, கும்ப பூஜை, மூல மந்திர ஜபம், திரவிய ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மஹா அபிஷேகம், கலச தீா்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரமும், இரவு 11.27 மணியளவில் மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.

குருப்பெயா்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரா்கள் பரிகாரம் செய்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.