பெரம்பலூரில் போக்சோ நீதிமன்றம் கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
பெரம்பலூரில் போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி, பாா் அசோசியேஷன் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுட்டனா்.


பெரம்பலூரில் போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி, பாா் அசோசியேஷன் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். பெரம்பலூரில் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு சிறப்பு நீதிபதி நியமனம் செய்ய வேண்டும். பெரம்பலூரில் கூடுதல் சாா்பு நீதிமன்றம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் பாா் அசோசியேஷன் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், சங்க செயலா் வி. சேகா், பொருளாளா் பி. சிவராமன் உள்பட 200-க்கும் மேற்கண்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதனால், மாவட்டத்திலுள்ள நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டதோடு, வழக்காடிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...