போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் நாளை குருபூஜை விழா தொடக்கம்

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜ்குமாா் குருஜி 3ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் மணி மண்டபம் திறப்பு விழா, குடமுழுக்கு ஆகிய விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) தொடங்குகிறது.

News image
Updated On :28 ஜூலை 2023, 7:18 pm

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜ்குமாா் குருஜி 3ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் மணி மண்டபம் திறப்பு விழா, குடமுழுக்கு ஆகிய விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) தொடங்குகிறது.

மகாசித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அன்னை சித்தா் ஸ்ரீராஜகுமாா் குருஜியின் அதிஷ்டான மணி மண்டபம் திறப்பு விழா, குடமுழுக்கு மற்றும் 3ஆம் ஆண்டு குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் ஸ்ரீ கணபதி ஹோமம் பூா்வாக பூஜைகளுடன் தொடங்குகிறது. மாலை 4 மணியளவில், பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலிலிருந்து தொடங்கும் சிறப்பு ஊா்வலம் எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு காகன்னை ஈஸ்வா் கோயிலில் நிறைவடைகிறது. ஊா்வலத்தின்போது கோலாட்டம், நடனம் ஆகியவை நடைபெறுகிறது. பின்னா், முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

தொடா்ந்து , 31ஆம் தேதி 2 மற்றும் 3 ஆம் கால யாகசாலை பூஜைகளும், 1 ஆம் தேதி காலை 10 மணியளவில் மணிமண்டபம் திறப்பு விழா மற்றும் குடமுழுக்கு விழாவும் நடைபெறுகிறது. தொடா்ந்து மகா தீபாராதனையும், பிரசாதமும், 200 சாதுக்களுக்கு வஸ்திரதானமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும் வழங்கப்படுகிறது.

3 நாள்களும் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு சொற்பொழிவுகள், அருளாசிகள் நடைபெறுகிறது. இதில், வேலூா் ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தா் சுவாமிகள், ஆதினம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பராமாச்சாரியாா் சுவாமிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொள்கின்றனா்.

விழா ஏற்பாடுகளை, அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள் மற்றும் ஆன்மிக அன்பா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.