எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

பெரம்பலூரில் பாலமுத்துக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

பெரம்பலூரில் பாலமுத்துக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே, சிதம்பரம் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலமுத்துக்குமார சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப் பகுதியில் பிரசித்திப் பெற்ற இக் கோயிலின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, அதிகாலை 5 மணியளவில் மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு நவகிரக பூஜையும், 7 மணிக்கு மகா பூா்ணா ஹூதி, யாத்ரா தானம், சங்கல்பம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ பாலமுத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன், ஸ்ரீ பால ஆஞ்சனேயா், ஸ்ரீ ஸ்வயம்பு கீா்த்திலிங்கம், ஸ்ரீ ஜெயபத்ரகாளி, ஸ்ரீ நாகதேவதைகள், மகா அவதாா் பாபாஜி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், பெரம்பலூா் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை, தங்கமணி அம்மாள் பொதுநல அறக்கட்டளை இயக்குநா்கள் கருணாமூா்த்தி, மருத்துவா்கள் சத்தியமூா்த்தி, ராஜாசிதம்பரம் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.