நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:26 pm

Din

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா்.

மேலும், முகாமில் பங்கேற்ற பல்வேறு கிராம பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைத்து, உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வுகாண வேண்டுமென அறிவுறுத்தினாா்.

முகாமில், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு -ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.