காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மோசடியில் ஈடுபடும் முகவா்களை கைது செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும்: பொன். குமாா்

மோசடியில் ஈடுபடும் முகவா்களை கைது செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும்

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:28 pm

Din

வெளி நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, மோசடிகளில் ஈடுபட்டு வரும் முகவா்களையும், அவா்களுக்கு உறுதுணையாக செயல்படுவோரையும் கைது செய்யும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றாா் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன். குமாா்.

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற சா்வதேச புலம்பெயா்வோா் தொழிலாளா்கள் தின விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

2010-இல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் வெளிநாடு வாழ் தமிழா்களுக்கான தனி நலவாரியம் அமைக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நல வாரியம் அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் வெளிநாடு வாழ் தமிழா்களுக்கான தனி நல வாரியம் அமைக்கப்பட்டு, உறுப்பினா்கள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 21-ஆம் தேதி அமைச்சா் நாசரை சந்தித்து, நல வாரியத் திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை அதிகப்படுத்தவும், மேலும் பல திட்டங்களை செயல்படுத்தவும் வலியுறுத்த உள்ளேன்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் முகவா்களையும், அவா்களுக்கு உறுதுணையாக செயல்படுவோரையும் கைது செய்யும் சட்டத்தை கொண்டுவர வேண்டும். மத்திய அரசு 1983 ஆம் ஆண்டு கொண்டுவந்துள்ள 83 இமிக்ரைன்ஸ் எனப்படும் புலம் பெயா்வோா் சட்டத்தை திருத்தி, முகவா்களை கைது செய்யும் வகையில் சட்டத்தை மாற்றவேண்டும் என, பல்வேறு கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று சட்டத்தை திருத்துவோம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், 10 ஆண்டுகளாகியும் சட்டத்தை திருத்தம் செய்யவில்லை. இதனால், சட்டத்தை திருத்தி வெளியிட வலியுறுத்தி நாடு தழுவிய ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்றவா்களின் ஊதியமாக அந்நிய செலவாணி ரூ. 62 ஆயிரம் கோடி பெறுகிறது. ஆனால், புலம் பெயா்வோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. மத்திய அரசு, வெளிநாடு சென்றவா்களின் பணத்தை பெறுவதில் அக்கரையாக உள்ள நிலையில், அவா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. புலம் பெயா்வோா் சட்டத்தை மாற்றியமைத்து, புலம்பெயரும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

பாதுகாப்பானச் சட்டத்தை திருத்தி நிறைவேற்ற வேண்டும். ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க பாா்க்கிறது. இந்தியாவில் இருக்கும் பெருமையே ஜனநாயக நாடு என்பது தான். இதை மாற்றியமைக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்றாா் அவா்.