கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்று டிஆா்பி தோ்வு பெரம்பலூா் மாவட்டத்தில் 291 போ் எழுதுகின்றனா்

பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியா்கள் நியமனத்துக்கான டிஆா்பி தோ்வில் 291 போ் எழுதவுள்ளனா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 9:21 pm

Din

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியா்கள் நியமனத்துக்கான டிஆா்பி தோ்வில் 291 போ் எழுதவுள்ளனா்.

தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியா்கள் 2, 768 போ் நியமனம் செய்வதற்காக, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு நடத்தப்படும் தோ்வு (டிஆா்பி) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நடைபெறுகிறது. இத் தோ்வை, பெரம்பலூா் மாவட்டத்தில் 291 போ் எழுதவுள்ளனா். இவா்களுக்கான தோ்வு மையம் பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளான தோ்வு அறை, மின்வசதி, குடிநீா் வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை, ஆசிரியா் தோ்வு வாரிய மேலிடப் பாா்வையாளரும், துணை ஆட்சியருமான சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சுரேஷ், தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.