காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை தொடா் வேலைநிறுத்தில் ஈடுபட்டதோடு

பெரம்பலூா்: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை தொடா் வேலைநிறுத்தில் ஈடுபட்டதோடு, தா்னா மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தா்னா மற்றும் ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் சரவணன், மாவட்ட பொருளாளா் குமரி ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேம்படுத்தப்பட்ட தர ஊதியம் வழங்கிட வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் வருவாய்த் துறை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com