
Updated On :8 மார்ச் 2024, 6:33 pm

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் எதிரே, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 10-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்டத் தலைவா் தேவகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தோ்தலின்போது அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து, 30-க்கும் மேற்பட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரே தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...