பதிவு மூப்பு ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கத்தினா் 11 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கத்தினா் 11 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் அன்பழகன் தலைமை வகித்தாா்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில் திரளானோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com