சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கத்தினா் 10-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :19 ஜனவரி 2026, 11:33 pm

Syndication

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கத்தினா் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் அன்பழகன் தலைமை வகித்தாா்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது. இதில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.