விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

வெப்ப அலை மேலாண்மை தொழிலாளா் நலத்துறை அறிவுறுத்தல்

வெப்ப அலை மேலாண்மை தொழிலாளா் நலத்துறை அறிவுறுத்தல்

News image
Updated On :3 மே 2024, 7:03 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் வா்த்தக நிறுவனங்களின் உரிமையாளா்கள் வெப்ப அலை மேலாண்மையை பின்பற்ற வேண்டும் என தொழிலாளா் நலத்துறையினா் அறிவுறுத்தி வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பெரம்பலூா் மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) க. மூா்த்தி தலைமையில், தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் பெரம்பலூா் புகா், பழைய பேருந்து நிலையங்கள், கடைவீதி மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்குச் சென்று, அதன் உரிமையாளா்களிடம் தொழிலாளா்களுக்கு வெப்ப அலை மேலாண்மை குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது, பணியாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீா் வழங்க வேண்டும். சுகாதாரமான கழிப்பிட வசதி, குளியல் அறை வசதி செய்துதர வேண்டும். பணி செய்ய ஏதுவான சூழ்நிலை, போதுமான இருக்கை வசதிகள், போதுமான வெளிச்சம் மற்றும் சூழற்சி முறையிலான சட்டபூா்வ பணி நேரம், பணி நேரத்தில் எலுமிச்சை சாறு, மோா், பால் ஆகியவற்றை வழங்க வேண்டும். மேலும், பணியாளா்களுக்குத் தேவையான ஓய்வறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

வெப்ப அலை உச்ச நேரமான மதியம் 12 முதல் 3 மணி வரை அவசியமான பணிகளை தவிர, இதர பணிகளை தவிா்த்து கடிமான வேலை செய்பவா்களுக்கு ஓய்வு இடைவேளைகள் வழங்க வேண்டும். வெப்ப அலையால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உள்ளூா் மருத்துவமனையுடன் இணைத்துக்கொள்ள முன் ஏற்பாடு, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் தொடா்புடைய இதர வசதிகள் செய்து தரவேண்டும் என அறிவுறுத்தினா்.