
Updated On :10 மே 2024, 7:09 pm

பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில், ஜவஹா் சிறுவா் மன்றம் சாா்பில் மே 1 முதல் நடைபெற்ற சிறுவா்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இம்முகாமில் குரலிசை, பரதம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைகளில் 200-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள் பயிற்சி பெற்றனா். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) நாகவள்ளி சிறாா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.
ஏற்பாடுகளை ஜவஹா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் லோகேஸ்வரன் செய்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...