மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெரம்பலூரில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில், குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் காவல்துறை வாகனங்கள் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:54 pm

Din

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில், குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் காவல்துறை வாகனங்கள் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்து, அவற்றை பராமரிப்பது குறித்த காவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கினாா்.

பின்னா், காவல் நிலைய பொறுப்பு அலுவலா்கள் முன்னிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனைகள் தெரிவித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா் ஆதா்ஷ் பசேரா.

இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), துணைக் கண்காணிப்பாளா்கள் ஆரோக்கியராஜ், எம். தனசேகரன், காமராஜ், பிரபு மற்றும் காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், நீதிமன்றக் காவலா்கள் கலந்துகொண்டனா்.