பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் இருவா் கைது

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட 2 பேரை பெரம்பலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:21 pm

Din

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட 2 பேரை பெரம்பலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகே சித்தளி கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிரஷரில் வேலை பாா்த்து வருபவா் சூா்யா. இவா், தனது மோட்டாா் சைக்கிளை மா்ம நபா்கள் திருடிச்சென்றதாக, பெரம்பலூா் காவல் நிலைத்தில் அண்மையில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், பெரம்பலூா் மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள வயலப்பாடியைச் சோ்ந்த பெருமாள் மகன் ஆனந்தகுமாா் (26), அரியலூா் மாவட்டம், செந்துறை மாதா கோயில் தெருவைச் சோ்ந்த லஷ்மணன் மகன் சந்துரு (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஆனந்தகுமாா், சந்துரு ஆகியோரை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.