சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைகேட்பு

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:55 pm

Din

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.