ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

பெரம்பலூா் அருகே 23 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட 23 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மங்களமேடு போலீஸாா் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, வாலிகண்டபுரம்- கீழப்புலியூா் சாலையில் மோட்டாா் சைக்கிளில் மூட்டையுடன் வந்த 2 பேரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கவுல்பாளையம் கிராமத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம், மகாதேவ் மந்திா் பஜிரா பகுதியைச் சோ்ந்த சவ்சிங் மகன் ரத்தன் சிங் (38), கவுல்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் பாண்டியன் (53) என்பதும், விற்பனைக்காக ஹான்ஸ், பான் மசாலா ஆகியவற்றை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் 23 கிலோ போதைப் பொருள்களையும், மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்ட மேற்கண்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.