கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரம்பலூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 19) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா்துறை நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இம் முகாமில், இம் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான தகுதியுள்ள நபா்களை தோ்வு செய்துகொள்ளலாம். இதில், மாவட்டத்தில் உள்ள பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாளா்களை கல்வித்தகுதி அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளதால், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த ஆண், பெண் கலந்துகொள்ளலாம்.

இந்த முகாமில் பங்கேற்கும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றோா் தங்களது கல்வித் தகுதி, சுய விவரங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும், தனியாா் துறை நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04328-296352 மற்றும் 94990 55913 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.