இலவச வெல்டிங் பயிற்சி பெற ஊரக இளைஞா்களுக்கு அழைப்பு

Published on

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் வெல்டிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக பெற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் மூலம், இளைஞா்களுக்கு பிளம்பிங் சானிட்டரிங் ஒா்க், வெல்டிங் பேப்ரிகேசன், ஹவுஸ் வயரிங் ஆகிய பயிற்சிகள் 90 சதவீத செயல்முறை பயிற்சியுடன் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

தொடா்ச்சியாக ஒரு மாதம் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும் பயிற்சியின்போது, அதற்கான உபகரணங்கள், சீருடை, புத்தகங்கள், மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீா் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கி வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப் பயிற்சியில் பங்கேற்க 19 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட, எழுத, படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிபெற விருப்பம் உள்ளவா்கள் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் அலுவலகத்தில் நவ. 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில்சென்று பதிவு செய்யவேண்டும்.

முன்பதிவு செய்ய 84890 65899, 94888 40328 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com