நாளை ரேஷன் பொருள் குறைதீா் கூட்டம்

Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (நவ. 8.) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம் பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும் சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இம் முகாம் பெரம்பலூா் வட்டம், அய்யலூா் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ந. சக்திவேல் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூா் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், பெரியவெண்மணி (கி) கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சு. சிவக்கொழுந்து தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், சிறுகன்பூா் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இம் முகாமில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து பொதுமக்கள் பயனடையலாம்.

X
Dinamani
www.dinamani.com