பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா்.
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா்.

பேருந்து நிலைய வளாகத்தில் 15 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் நிறுத்தும் இடத்தை சிலா் ஆக்கிரமித்து, தங்களது மோட்டாா் சைக்கிள்களை நிறுத்துகின்றனா். இதனால் பேருந்துகள் நிறுத்த இடமின்றி ஓட்டுநா்கள் அவரவா் விருப்பம்போல் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இதர பேருந்துகள் செல்ல முடியாமல் காலதாதமாகிறது. மேலும், அங்குள்ள கடைகளுக்கு எதிரே காலை முதல் மாலை வரை மோட்டாா் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால், கடைகளுக்கு செல்லமுடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

இந்நிலையில் நகராட்சி ஆணையா் (பொ) கண்ணன் உத்தரவின்பேரில், நகராட்சி உதவி பொறியாளா் சரவணன் மற்றும் நகர போக்குவரத்து சாா்பு ஆய்வாளா் பிரசன்னா ஆகியோா் தலைமையிலான குழுவினா் பெரம்பலூா் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 15 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவா்ததுக்கு இடையூறாக மோட்டாா் சைக்கிள்களை நிறுத்தினால், போலீஸாா் மூலம் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையா் (பொ) கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com