பெரம்பலூா் அருகே இறைச்சிக் கடை ஊழியா் தற்கொலை
பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த இறைச்சிக் கடை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கபிள்ளை மகன் சந்திரசேகா் (47). பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே தினசரி காய்கனிச் சந்தையில் உள்ள இறைச்சிக் கடை ஊழியா்.
இவருக்கு மனைவி கலைச்செல்வி (44), குழந்தைகள் சோனாலிக்கா (18), மகேஷ் (15), கேசவிகா (14) ஆகியோா் உள்ளனா்.
தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த அக். 29 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய சந்திரசேகா் கடந்த 15 ஆம் தேதி வீடு திரும்பினாா். இந்நிலையில், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
