ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வேப்பூரில் சமூகநல கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் வேப்பூா் அரசு மகளிா் கல்லூரி சமூக நல கல்லூரி மாணவியா் விடுதியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:14 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் வேப்பூா் அரசு மகளிா் கல்லூரி சமூக நல கல்லூரி மாணவியா் விடுதியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், ரூ. 6.05 கோடி மதிப்பில் கீழக்கணவாய் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டப்படவுள்ள சமூக நல விடுதிக்கும் அடிக்கல் நாட்டினாா்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட வேப்பூரில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூகநீதி கல்லூரி மாணவிகளுக்கான விடுதியை திறந்துவைத்து, பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட கீழக்கணவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 6.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநீதி தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் விடுதிக்கு அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வேப்பூா் அரசு மகளிா் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள சமூகநல கல்லூரி மாணவியா் விடுதியில் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டு, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் க.கண்ணன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் வேலுசாமி, வட்டாட்சியா்கள் பாலசுப்ரமணியன் (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.