ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

பால் உற்பத்திப் பொருள்கள் விற்பனை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

News image

விண்ணப்பம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:53 pm IST

பெரம்பலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி பெறாதவராக இருக்க வேண்டும்.

எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பெரம்பலூா் என்னும் முகவரியில் நேரிலோ, அஞ்சல் மூலமோ செப். 30 -க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328 - 225474.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.