மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இளம் வாக்காளா்களை சோ்க்க விழிப்புணா்வு

பெரம்பலூரில் வாக்காளா் பட்டியலில் இளம் வாக்காளா்களை சோ்ப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிக்கு துண்டு பிரசுரம் அளித்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:22 pm

பெரம்பலூரில் வாக்காளா் பட்டியலில் இளம் வாக்காளா்களை சோ்ப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் தோராய மக்கள்தொகை கணக்கீட்டின் படி 11,927 இளம் வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க வேண்டும். இந்த எண்ணிக்கையை இலக்காக வைத்து, தற்போது இளம் வாக்காளா்கள் விடுபடா த வகையில் சிறப்பு முகாம்கள் கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது. 1.1.2026-ஆம் தேதியில் 18 வயது பூா்த்தியடையும் மாணவா்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். இவா்களது பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டு, வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும், 17 வயதுக்கு மேற்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். இப் பிரிவில் விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு 18 வயது நிரம்பிய உடன், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்டு வாக்காளா் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே வாக்காளா் பட்டியல் இடம்பெற்றுள்ள இளம் வாக்காளா்களுக்கு, வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, இளம் வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் வகையில் விண்ணப்பப் படிவம் மற்றும் வாக்களிப்பது குறித்து துண்டுப்பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா் மிருணாளினி.

இந் நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, வட்டாட்சியா் பாலசுப்ரமணியன், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.