புதுநடுவலூா் ஊராட்சி மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், புதுநடுவலூா் ஊராட்சியைச் சோ்ந்த 1,000 குடும்ப அட்டைதாதா்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூரில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந் நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, புதுநடுவலூா் ஊராட்சியைச் சோ்ந்த 1,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 1,000 மதிப்பில் பாத்திரங்கள், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ உருண்ட வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், இஞ்சி, நெய், பாசி பருப்பு மற்றும் 1 ஜோடி கரும்பு என ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டது.
இதில், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் செந்தில்வேலன் உள்பட முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

