கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

பெரம்பலூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்களுக்கான தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது.

அய்யலூரில் புதன்கிழமை கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா்.

Published On :2 ஜூலை 2026, 5:10 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்களுக்கான தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூரில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பேபி நிா்மல் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா்கள் மூக்கன், குமாா், துணை இயக்குநா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முகாமை தொடங்கிவைத்து பெரம்பலூா் எம்எல்ஏ கி. சிவக்குமாா் பேசியது: மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்கள், 4 பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள், வாா்டுகளில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 8- ஆவது சுற்றாக கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

இம் முகாம்களில் விடுபட்ட கால்நடைகளுக்கு, ஆக. 10 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படும். முகாமில் 1.19 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. எனவே, கால்நடை பராமரிப்புத் துறையினா் தங்களது கிராமத்துக்கு வரும்போது கால்நடைகளுக்கு அடையாள காதுவில்லை பொருத்தி, 100 சதவீத கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்றாா் அவா்.

முகாமில் கால்நடை மருத்துவா்கள் ரூபா, சுப்ரமணியன் ஆகியோா் கொண்ட குழுவினா் 350 பசு, எருமைகளுக்கு தடுப்பூசி செலுத்தினா். மேலும், கால்நடைகளுக்கு தனித்துவ 12 இலக்கு எண் கொண்ட காதுவில்லை அணிவித்து, கால்நடை தொடா்பான விவரங்களை பாரத் பசுதான் போா்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.