ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி கூட்டுறவு வங்கிகள் எதிரே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளின் பயிா் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கூட்டுறவு வங்கிகள் எதிரே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :23 ஜூலை 2026, 12:20 am IST

விவசாயிகளின் பயிா் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கூட்டுறவு வங்கிகள் எதிரே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட நெய்குப்பை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் எதிரே, தமிழக முதல்வா் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்ததன் படி பயிா் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, சம்பந்தப்பட்ட வங்கி செயலா்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

அரியலூா், பெரம்பலூா் மண்டல ஒருங்கிணைப்பாளா் செ. அழகேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் ஆனந்த், வடக்கு மாவட்டத் தலைவா் கருப்பையா, நிா்வாகிகள் திருநாவுக்கரசு, மருதை, வெங்கடேசன் உள்பட சுமாா் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.